பொதுவாக சினிமாவில் நடிக்கும் பலரும் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுவார்கள் ஆனால் தற்போது அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிப்போன நிலையில் படத்தில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலமாக பிரபலமானவர்களே அதிகமாக உள்ளனர். இதன் காரணமாக பல முன்னணி திரையுலக பிரபலங்களும் சோசியல் மீடியா பக்கம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கையில் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை

இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்தா வகையில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் தனது குழந்தைபருவ புகைபடத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் இருக்கும் நடிகை யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த நடிகை வேறு யாருமில்லை மலையாளத்தை பூர்விகமாக கொண்டு அதில் பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக தமிழ் மக்களிடையே தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக  நடித்து வந்ததோடு முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து

பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் இவரது குழந்தைபருவ புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம பாவனாவா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்……