தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல இன்னல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு இதன் காரணமாக திரையுலகில் பிரபலங்களாக வலம் வந்த பல முன்னனி நடிகர் நடிகைகளும் நம்மை விட்டு பிரியும் வகையில் தொடர்ந்து காலமாகி வருகின்றனர். மேலும் இந்த நிலை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தினந்தோறும் இது போன்ற தகவல்கள் இணைய பக்கத்தில் உலா வந்த வண்ணம் இருப்பதோடு பலரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இப்படியொரு நிலையில் தற்போது மேலும் சினிமா பிரபலம் எதிர்பாரதவிதமாக

காலமாகியுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 50-களின் காலகட்டத்திலேயே  பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா . இதையடுத்து தமிழ், தெலுங்கு,

மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக கிட்டத்தட்ட பல நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் தனது 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டதை அடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் அரசியல் மீது கொண்ட நாட்டத்தால் காங்கிரல் கட்சியில் இணைந்தார் அதன் பின்னர் அதிலிருந்து ஒரே தாவாக பாஜகவுக்கு தாவிய இவர் ஒரு முறை

மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் 86 வயதை கடந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு சில காலம் வீட்டிலேயே இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய நாளில் இவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய நிலையில் சிக்ச்சை பலனின்றி காலமானர். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…….