சின்னத்திரையில் பிரபல தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதே அளவிற்கு இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் வெகு பிரபலமாக உள்ளார்கள் எனலாம். இந்நிலையில் இந்த சேனலில் வெளிவந்த பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவர் மற்றும் தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரபல ,முன்னணி காமெடி நடிகர் தாடி பாலாஜி. இந்த திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து அதன் மூலமாக மக்களிடையே பிரபலமானதை காட்டிலும் விஜய் டிவியில் கலந்து

கொண்டு அதன் மூலமாக பிரபலமானது தான் அதிகம் எனலாம். இதனைதொடர்ந்து தாடி பாலாஜி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததை அடுத்து சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இருவரும் ஒன்றாக பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்

மூலமாக மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் அந்த உறவு சில காலமே நீடித்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் இருவரும் பிரிந்து விட்டனர். இது ஒரு பக்கம் இருக்க தற்போது சென்னையில் மாதவரம் சாஸ்திரி நகர் எக்ஸ்டென்சன் பகுதியில் தனது மகளுடன் வாழ்ந்து வரும் நித்யா தனது வீட்டின் எதிர்புறம் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு

வந்ததை  அடுத்து இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான நித்யா நேற்று நள்ளிரவு வேளையில் அந்த வீட்டின் உரிமையாளரின் காரை கல்லால் தாக்கி சேதபடுதியுள்ளார். இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்த அந்த ஆசிரியர் தனது கார் சேதமாகி இருப்பதை பார்த்த உடனே சிசிடிவி காட்சியை பார்த்தபோது, அதில் நித்யா கூறிய கல்லை கொண்டு தனது காரை தாக்கியதோடு பலமான பல கீறல்களையும் போட்டது தெரிய வந்ததை அடுத்து போலீசில் புகார் செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்………..