தற்போது மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தை பற்றி தான். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேக்காக ரசிகர்கள் பல மாதங்கள் காத்திருந்த நிலையில் லோகேஷ் ஏற்கனவே சொன்னதுபோல பிப்ரவரி முதல் வாரத்தில் அப்டேட் வரும் என கூறிய நிலையில் அதற்கு ஏற்றாற்போல் தொடர்ந்து பல புது அப்டேட்களை கொடுத்து

ரசிகர்களை திணறடித்து வருகிறார். அந்த வகையில் முதலில் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது இதனைதொடர்ந்து படத்தின் பூஜை நிகழ்வுகளின் வீடியோ வெளியானது. அடுத்த அப்டேட்காக படத்தின் டைட்டில் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கான பதிலாக படத்தின் ப்ரோமொவுடன் படத்தின் டைட்டிலையும் படக்குழு வெளியிட்டு இருந்தார்கள். அதன்படி இந்த படத்திற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதோடு ப்ரோமோவில் தளபதி விஜய் படத்தில் சாக்லேட் பேக்டரியில் வேலை

செய்வது போல் இருப்பதோடு அதே இடத்தில கத்தியையும் செய்வது போல ப்ரோமோ உள்ளது மேலும் இதில் முந்தைய படங்களின் பல குறியீடுகளையும் வைத்துள்ளார்கள் . இப்படி இருக்கையில் அடுத்த கட்டமாக படத்தின் முதற்கட்ட படபிடிப்புக்காக படக்குழு விமானத்தில் காஷ்மீர் செல்லும் வீடியோவை தளபதி விஜய் அவர்கள் எடுத்தபடி இணையத்தில் வெளியாகி இருந்தார். இந்நிலையில் படத்தின் நாயகியாக த்ரிஷாவும் காஷ்மீர் பரந்த நிலையில் அவர் சென்று மூன்று நாட்களே முடிந்த

நிலையில் அங்கிருந்து திரும்ப வந்துள்ளார். இப்படி இருக்கையில் லோகேஷ் படத்தில் பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது மேலும் அவர்கள் காலமாகி போவதுபோல் தான் காட்சி இருக்கும் அதனால் இவரது காட்சிகள்  முடிந்து விட்டதா என பலரும் யூகித்து வரும் நிலையில் த்ரிஷாவுக்கு இயக்குனர் லோகேஷ் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றிப்போன நிலையில் படத்தில் இருந்து விலகி த்ரிஷா சென்னை திரும்பி விட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது…….