தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தொடர்ந்து பல இளம்  நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் அறுபது வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து படங்களில் மாஸ் ஆக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்தா படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிபெறும் என நினைத்த நிலையில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த

படத்தை தொடர்ந்து அடுத்த படமாக பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையங்குகளில் படம் வெளியாகக்கூடும் என படக்குழு தகவல்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படமாக பல படங்களில் கமிட்டாகி பிசியாகி நடித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும்

புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் சூப்பர் ஸ்டார் போஸ்டரை கட்டிபிடித்தபடி இருக்கும் சிறுவன் ஒருவர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் யார் என தெரியாமல் பலரும் குழ்ம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பலத்த ரசிகனுமான ராகவா

லாரான்ஷின் தம்பியும் நடன இயக்குனருமான எல்வின் தான் அது. இந்நிலையில் எல்வின் தனது இணையத்தில் சிறுவயதில் சூப்பர் ஸ்டார் போஸ்டருடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தையும் கடந்த சில மாதங்களுக்கு மூன்னர் குசேலன் படபிடிப்பில் அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைபடத்தையும் பதிவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து இந்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..