தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த பல நடிகர்கள் இன்றைக்கு படங்களில் அவ்வளவாக வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையில் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டனர். இருப்பினும் அதில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர்ந்து படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் துணை நடிகர்களில் ஒருவராக அதன் வில்லனாக பல முன்னணி

நடிகர்களின் படங்களில் நடித்து அதனைதொடர்ந்து தனது நடிப்பு திறமையின் மூலமாக பலரையும் வெகுவாக கவர்ந்து ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ். இவர் என்னதான் ஹீரோவாக பல படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். மேலும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த படங்களில் இவர் இல்லாத படங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு

வெகு பிரபலமாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற லவ் டுடே படத்திலும் வேற லெவலில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து பிரபலமாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவரது குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகார்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சத்யராஜ் அவர்கள் கடந்த 1979-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சிபிராஜ் எனும் மகனும் திவ்யா எனும் மகளும் உள்ளார்கள். இதில் சிபிராஜ் ஹீரோவாக திரையுலகில் நடித்து வரும் நிலையில் அவரது மகள் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் இப்படி இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் சத்யராஜ் அவர்களின் திருமண புகைபடம் வெளியான நிலையில் அதில் அவரது மனைவியை பார்த்த பலரும் இவங்கதான் இவரோட மனைவியா என வாயடைத்து போயுள்ளனர்……..