தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான பிரமாண்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையிலும் அந்த காலத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பல படங்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது எனலாம். அந்த வகையில் கடந்த 2002-ம் ஆண்டு மறைந்த பிரபல முன்னணி நடிகர் முரளி மற்றும் வைகைபுயல் நடிப்பில் முழுநீள காமெடி திரைப்படமாக வெளியாகி மக்கள் பலரையும் தீராத சிரிப்பில் ஆழ்த்திய திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ். இந்த படத்தில் ஒரு பஸ்ஸை வைத்து

கொண்டு முரளி மற்றும் வடிவேலு செய்யும் அலப்பரைகளுக்கு பஞ்சமிருக்காது எனலாம் அந்த அளவிற்கு நகைச்சுவையில் வேற லெவலில் கலக்கி இருப்பார்கள். இப்படி இருக்கையில் இந்த படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்து பலரது கவனத்தையும் வெகுவாக தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகை ராதா. தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பு மற்றும் வசீகரமான  தோற்றத்தால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர்

பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து தமிழில் பல படங்களில் ,முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இப்படி இருக்கையில் பல வருடங்கள் கழித்து தற்போது

மீண்டும் திரையுலகில் ரீன்ட்ரி கொடுத்துள்ள ராதா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த நிலையில் தற்போது அதன் இரண்டாவது  சீசனை வெற்றிகரமாக  தொடங்கியுள்ள பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாவது பாகத்தில் வில்லியாக நடித்து வருகிறார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..