பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை தற்போது பலரும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் அதிலும் ஒரு சில படங்களில் நடித்தாலே போதும் வெகுவாக பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்வதோடு முதல் படத்தில் வாங்கிய சம்பளத்தை அப்படியே பல மடங்காக உயர்த்தி கொள்கிறார்கள். அந்த வகையில் ரேடியோவில் ஆர்ஜெவாக தனது கலைபயனத்தை தொடங்கி அதன் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில்

பிரபலமானதை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலமாக இருந்ததை அடுத்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த எல்கேஜி படத்தின் மூலமாக கதாநாயகனாக தன்னை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டார். மேலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக

வரவேற்பு இருந்ததை அடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு இயக்குனர் , தயாரிப்பாளர் என பல துறைகளிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் , வீட்ல விசேஷம் போன்ற பல படங்கள் வேற லெவலில் ஹிட் கொடுத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ரன் பேபி ரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இதையடுத்து இந்த படத்தில் பாலாஜி முற்றிலும்

மாறுபட்ட கோணத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க ஆர்ஜே பாலாஜியின் சமீபத்திய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காரணம் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க சம்பளமாக 4 கோடி வாங்கியுள்ள நிலையில் இதற்கு அடுத்த படங்களில் தனது சம்பளத்தை 7 கோடியாக உயர்த்தியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….