திரையுலகில் சினிமாவில் வெளியாகும் படங்களை ஓரம்கட்டும் அளவிற்கு சின்னதிரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில்  அதிகளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் விஜய் டிவியில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு பலத்த பிரபலத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதைக்காட்டிலும் அதை தொகுத்து

வழங்கும் தொகுப்பாளர்களும் வெகு பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா. இவ்வாறு தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டு,மின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு முதல் ரன்னர் ஆப்பாக வந்திருந்தார் .

இந்நிலையில் பிரியங்கா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் வேலைசெய்து வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களாக பிரியங்காவிற்கும் அவரது கணவர் பிரவீனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை

ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இதையடுத்து இது குறித்து கேட்டபோது அவர்கள் இருவருக்கும் இடையில் எந்த வித பிரச்சனைகளும் இல்லை எனவும் இது வெறும் வதந்தி எனவும் பிரியங்கா தரப்பினர் கூறி வரும் நிலையில் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் சரிவராமல் தெரியாமல் உள்ளது ……..