பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் கலந்து கொண்ட பலரும் தற்போது திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் நிலையில் இந்த சேனலில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் பிரபல நடிகர் கவின். இவர் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து அதில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார்.

இதனைதொடர்ந்து பிக்பாசில் இருக்கும் போதே கவின் இலங்கை பெண் ஆன லாஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் அவர்களது காதல் என்ன ஆனது என்றே தெரியாமல் போனது. இப்படி ஒற்று நிலையில் தற்போது இருவரும் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவின் நடிப்பில் டாடா திரைபடம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில்

கவினை இளம் நடிகை ஒருவர் காதலித்து வருவதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நிலையில் அது குறித்து கேட்டபோது டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தவர் பிரபல இளம் நடிகை அபர்ணா தாஸ் . இவர் இந்த படத்திற்கு முன்னர் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இருந்தார் இந்நிலையில் இந்த படத்தில் கவின் மற்றும் இவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்ததோடு

அபர்ணா தாஸ் தனது இணைய பக்கத்தில் காதலர் தினத்தில் கவின் குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை வைத்து அபர்ணா தாஸ் நடிகர் கவினை காதலிப்பதாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இந்த தகவல்கள் அவரது ரசிகர்கள் ,மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……..