தற்போது தென்னிந்திய அளவில் பெரும் பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதியின் 67-வது படமான லியோ படம் குறித்த தகவல்கள் தான். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் அவர்களை குஷிபடுத்தும் வகையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் தற்போது படக்குழு

முழுவதும் காஷ்மீர் சென்ற நிலையில் அங்கு படப்டிப்பில் இருந்தபடி பல புகைபடங்களையும் தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் , சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் , த்ரிஷா, மேத்யு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர்

இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம டிரென்ட் ஆகி வருகிறது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது நிறுத்தபட்டுள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் உலகின் பல இடங்களில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டு

பலத்த சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக அங்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கும் நிலையில் தற்போதைக்கு படபிடிப்பை நிறுத்தபோவதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது……..