தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் உருவாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தந்கலது௭ நகைச்சுவை திறமையின் வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வந்த பல முன்னணி காமெடி நடிகர்களும் இன்றைக்கும் தங்களது காமெடியின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளதோடு இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்த வகையில் 80, 90காலகட்டத்தில் இருந்து ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடங்கி இன்றைக்கு பல இளம் ஹீரோக்கள் படங்கள் வரை பல படங்களில் காமெடி நடிகராக நடித்து சினிமா உலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் மறைந்த பிரபல முன்னணி காமெடி நடிகர் சின்னகலைவாணர் விவேக்.

மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு படங்களில் வெறுமனே காமெடி மட்டுமின்றி சிந்தனைமிகுந்த பல கருத்துகளை தனது நகைச்சுவையின் மூலமாக எளிதாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். இதனைதொடர்ந்து படங்களில் நடிப்பதை கடந்த தனது இயல்பு வாழ்க்கையிலும் மிகுந்த சேவை மனப்பான்மை மற்றும் சமூக சிந்தனை கொண்ட இவர் பல சமூக சேவைகளை செய்துள்ளதோடு பல மரக்கன்றுகளை தனது முயற்சியின் மூலமாக நட்டுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பிரபலமாக இருந்து வந்த விவேக் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் . என்னதான் இவர் மறைந்து இருந்தாலும் இவரது காமெடி மற்றும் சேவைகளின் மூலமாக இன்றளவும் பல ,மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார். இவ்வாறு இருக்கையில் இவரது பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது ………