தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பிரமாண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருவதோடு அமோக வெற்றியை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மக்கள் அனைவரின் பெருத்த எதிர்பார்ப்பாக இருந்து வருவது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதியின் 67-வது படமான லியோ படத்தின் வருகைக்காக தான் .

இப்படி இருக்கையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யு, கவுதம் மேனன் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருவதோடு இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களில் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குழப்பமடைய செய்யும் நிலையில் படக்குழு முழுவதும் தற்போது காஷ்மீரில் படபிடிப்பு வேலைகளில் விறுவிறுப்பாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் இந்த படம் குறித்த

பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் லெஜென்ட் சரவணா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பீதியை கிளப்பி வருகிறது. இது குறித்து கேட்கையில் லெஜென்ட் சரவணா அவர்கள் தனது முதல் படத்தை முடித்த நிலையில் அடுத்த படத்திற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள நிலையில் சரவணா

அவர்கள் தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தான் காஷ்மீர் இருப்பதை காட்டியுள்ள வீடியோவை பார்த்த பலரும் அட இவரும் லியோ படத்துல நடிக்கறாரா என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அப்படி எல்லாம் எதுவும் இல்லை அவர் அங்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது………