தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான களவானி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஓவியா . தனது முதல் படத்திலேயே இளமையான தோற்றம் மற்றும் வசீகர நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் தனக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார் . இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக

நடிக்கும் வாய்ப்பை பெற்றார் இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ,மலையாளம்  என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் அடுத்ததாக பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படங்களில் நடித்து வந்த பிரபலத்தை தாண்டிலும் பல மடங்கு பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து அம்மினிக்கு பட வாய்ப்புக்கள் குவிய

தொடங்கிய நிலையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் ஆளே காணாமல் போய்விட்டார். இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை திணறடித்து வருகிறார் . மேலும் அவரது ரசிகர்கள் இணைய பக்கத்தில் கேட்கும் பல கேள்விகளுக்கும் வெளிப்படையாக ஓவியா பதில் கொடுத்து

வரும் நிலையில் சமீபத்தில் அவரது ரசிகர் உங்க திருமணம் எப்போ என கேட்க இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான ஓவியா, நான் இனிமேல் திருமணம் செய்து கொள்ளபோவதில்லை ஏன் எல்லோரும் இந்த கேள்வியா கேட்டு உயிரை எடுக்குறீங்க என கண்டபடி திட்டி தீர்த்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……..