தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் புதுமுகங்களாக பல நடிகர்கள் அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி பிரபலத்தை தேடி கொள்கின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வரும் பல முன்னணி நடிகர்களும் என்னதான் படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்தாலும் அவர்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில்

நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி தனக்கென தனி பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகர் நெப்போலியன் . திரையுலகில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து அதன் ,மூலம் மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி ஹீரோவாக நடிக்க

துவங்கினார். இதனைதொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி திரையுலகில் இதுவரை சர்ச்சையான வதந்திகள் எதிலும் சிக்காத நடிகர்களில் இவரும் ஒருவர்  எனலாம் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நெப்போலியன் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம்

செய்து கொண்ட நிலையில் இவருக்கு இருமகன்கள் உள்ளார்கள் இதில் அவரது மகன்கள் உடல் அளவில் இருக்கும் பிரச்சனை காரணமாக தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி அவர்களுக்காவே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது குடும்ப புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………