தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து இருப்பதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் தனது சிறுவயது முதலே படங்களில் நடித்து வரும் தளபதி விஜய் அவர்கள் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலமாக தென்னிந்திய அளவில் தனது பிரபலத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் . இவ்வாறு இருக்கையில் இவரது அப்பாவும் பிரபல முன்னணி

இயக்குனருமான எஸ் ஏ சியின் இயக்கத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான தளபதி விஜய் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார் மேலும் இந்த படம் வெளியாகத நிலையிலேயே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க

பொதுவாக விஜய் அவர்கள் தங்கையை மையமாக கொண்ட படங்கள் என்றாலே அதில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் அந்த வகையில் திருப்பாச்சி , கில்லி என பல படங்களில் நடிப்பதை தாண்டி வாழ்ந்தே இருப்பார் எனலாம் . இதற்கு காரணம் அவருக்கு வித்யா எனும் தங்கை ஒருவர் இருந்த நிலையில் அவர் சிறுவயதிலேயே சில எதிர்பாரதவிதமாக காலமாகி விட்டார் . இந்நிலையில் அவரது நினைவாக பல

வருடங்களாக அவரது நினைவு நாளை அனுசரித்து வரும் விஜய் அவரது பெயரில் பல உதவிகளையும் வெளியில் தெரியாமல் செய்து வருகிறார். இப்படி இருக்கையில் அவரது தங்கை வித்யாவுடன் தளபதி விஜய் ஒன்றாக எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………