பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்க படுவதோடு அதில் நடிக்கும் நடிகர்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொண்டு தற்போது திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் நிலையில் இந்த

நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு வெகு பிரபலமாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் கடந்த நான்கு சீசன்களாக முன்னணி சீனியர் கோமாளிகளில் ஒருவராக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. சன் மியூசிக் சேனலில் விஜேவாக தனது கலைபயனத்தை தொடங்கிய இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி தனது

நகைச்சுவையான பேச்சு மற்றும் துடிப்பான நடிப்பால் தனக்கென  தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் கடந்த வாரம் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் . அதில் இனி நான்  வரமாட்டேன் இதுவே குக் வித் கோமாளியில் கடைசி எபிசொட் என உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வரும் நிலையில் சமீபத்தில் இவர் இந்த

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . அதன்படி மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் கலந்து கொள்ள சுமார் 60 ஆயிரம் வாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது ………