தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் மேலும் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு இதுவரை பல நூறுக்கும் மேபட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவர் இன்றளவும் பல இளம் நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து படங்களில் நடிப்பதை தாண்டி பல முன்னணி நிறுவன

விளம்பர படங்களில் நடித்தும் வருகிறார் . இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் பிரமாஸ்திர திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அமிதாப் அடுத்ததாக பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடிக்கும் போது எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டு அதில்

அமிதாப் அவர்களுக்கு விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அந்த பகுதியின் ரிப் எலும்புகள் உடைந்து போனதை அடுத்து அவரை உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து தற்போது அவரது உடல்நலம் ஓரளவு தேறி வரும் நிலையில் அமிதாப் மும்பை திரும்பி தனது வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். இதையடுத்து இந்த விபத்து குறித்து இணையத்தில்

பதிவிட்டுள்ள அமிதாப் அதில் ஆம் மூச்சு விடும் போதும் நகரும் போதும் அந்த இடத்தில் அதிக வலி இருக்கிறது இந்த வலி சரியாக சில வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் அதற்கான வலி மாத்திரைகளை எடுத்து வருவதாகவும் அதில் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………..