கடந்த சில வருடங்களாக திரையுலகில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் பதிவுகளும் புகைப்படங்களும் தான் அதிகளவில் பிரபலத்தை பெற்று வருகிறது . இப்படி இருக்கையில் இதன் காரணமாக பலரும் சோசியல் மீடியா பக்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி இதன் மூலமாக பிரபலத்தை தேடி வருகின்றனர். இப்படி இருக்கையில் இணையத்தில் சிறுவயதிலேயே அழகில் ஆளைமயக்கும்

வகையில் தலையில் குடுமியும் பூவுமாக ஒரு பக்க சேலையுடன் குழந்தைகளுக்கு உரித்தான அழகோடு குழந்தை ஒருவரின் புகைபடம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது . இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த குழந்தை யாரென்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அந்த வகையில் அந்த குழந்தை வேறு யாருமில்லை மலையாளத்தை பூர்விகமாக கொண்டு கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் வெளியாகி பல இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ப்ரேமம் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்து தனது இளமையான தோற்றம் மற்றும் அழகால் பலரையும் வெகுவாக கவர்ந்த பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் அது. இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானதை அடுத்து முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன்

ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அம்மினிக்கு குவிந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி தனது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் தனது சிறுவயது புகைபடத்தை பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்து வருகிறார்………..