தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலத்தை பெற்று வருகின்றன . அதிலும் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும் இல்லத்தரசிகள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாக உள்ளது . இந்நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த தொடர் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும்  பாசபோராட்டத்தை மையமாக வைத்து நகர்ந்து வரும் நிலையில் இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், சாய் காயத்ரி,

ஹேமா  என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் . இப்படி இருக்கையில் இதில் தம்பிகளில் ஒருவராக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கடேஷ் ரெங்கநாதன் . இவர் இந்த தொடருக்கு முன்னரே பல தொடர்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். அதிலும் இதில் ஜீவாவிற்கும் அவரது மனைவியாக நடிக்கும் மீனாவிற்கும் இடையில் நடக்கும் குட்டி கலாட்டா

பார்ப்பவர்களை சிரிப்பலையில் கொண்டு சேர்ப்பதோடு ரோமன்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது .இந்நிலையில் பார்பவர்கள் பலரும் இவர்கள் இருவரும் உண்மையாகவே நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவி தான் என நம்பும் அளவிற்கும் இருக்கும். இப்படி இருக்கையில் ஜீவாவிற்கு நிஜ வாழ்க்கையில் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி அவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார் . இவ்வாறு இருக்கையில்

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜீவா அடிக்கடி தனது புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது மனைவி மகளுடன் வேற லெவலில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை பதிவிட்டுள்ளார் . அந்த புகைபடத்தில் அவரது மனைவி மற்றும் மகளை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்………