தற்போது சினிமாவில் புதுமுகங்களாக ஏராளமான இளம் நடிகைகள் வந்த வண்ணம் இருப்பதோடு ஹீரோயினாக நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் அழகால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் தனது திரையுலக வாழ்க்கையை மாடலிங் மூலமாக தொடங்கியதை அடுத்து பல முன்னணி நிறுவங்களின் விளம்பர படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமாகி அதன் வாயிலாக ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா. துவக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில்

துணை நடிகையாக நடித்து வந்த நிலையில் தனது நடிப்பு மற்றும் அழகால் பல்றைத்து கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை அடுத்து கதாநாயகியாக நடிக்க துவங்கிய சில வருடங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு முன்னணி நடிகைகள் வரிசையில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில்

ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் அவ்வளவாக வராமல் தவித்து வந்தார். இதையடுத்து ஒரு சில வெப் சீரியஸில் நடித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய மார்க்கெட்டை தக்க வைத்து கொண்ட தமன்னா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 4-ல் ஹீரோயினாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக

இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வரும் நிலையில் சமீபத்தில் தனது தாய் மற்றும் தந்தையுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார் . அதைபார்த்த பலரும் அட இவங்கதானா இவரோட அம்மா என வாயடைத்து போயுள்ளனர்………