தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகம் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிகளவில் மோகம் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்கள் கூட தற்போது இந்த பக்கம் நகர்ந்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் பிரபல தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் வேற லெவலில் ஹிட்டாக இருக்கும் நிலையில் இந்த சேனலின் முன்னனி ரியாலிட்டி

நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பாலா . இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் இவரது நகைச்சுவையான பேச்சு மற்றும் இடைவிடாது கலாயிக்கும் திறமை மக்கள் மத்தியில் இவருக்கு தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது . இதனைதொடர்ந்து பிரபல முன்னணி

ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதோடு தொகுத்து வழங்கியும் வருகிறார். இந்நிலையில் விரைவில் பாலாவிற்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில்

பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து கேட்டபோத, பாலாவிற்கு அவரது குடும்பத்தினர் மும்முரமாக பெண் பார்த்து வரும் நிலையில் நிச்சயம் இந்த வருட இறுதிக்கும் அவருக்கு திருமணம் நடத்த இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர் . இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரளாகி வருகிறது………..