சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலத்தை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . சமையல் போட்டியை மையமாக வைத்து வெளியாகும் இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலமாக காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான் எனலாம். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை

வெற்றிகரமாக கடந்து நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் பலரும் கோமாளிகளாக கலந்து கொண்டு தங்களது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னணி கோமாளிகளில் ஒருவரான விஜே மணிமேகலை தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் இனி நான் வரமாட்டேன் இதுவே குக் வித் கோமாளியில் எனது கடைசி எபிசொட் என

பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து இவர் இந்த நிகழ்ச்சியில் வெளியேற காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி சீனியர் கோமாளி வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து கேட்டபோது பிரபல கோமாளிகளில்

ஒருவராக வலம் வரும் குரேஷி இனி குக் வித் கோமாளியில் கலந்து கொள்ளபோவதில்லை எனும் தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த தகவல்கள் வெளியான சிறிது நேரத்திலேயே அந்த பதிவு நீக்கபட்டு இருக்கும் நிலையில் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை………..