தற்போது சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் புதிதாக தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில்  தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக தன்னை

அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் அஞ்சலி. இந்த படத்தை தொடர்ந்து அங்காடிதெரு படத்தில் ஹீரோயினாக நடித்த நிலையில் இவரது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பு பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் அம்மினிக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கியது. இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில்

ஹீரோயினாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் பல முன்னணி வெப் சீரியஷில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நடிகை அஞ்சலை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில்

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கேட்டபோது , ஏற்கனவே நடிகர் ஜெய் அஞ்சலியை காதலித்து வந்ததாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாக பல தகவல்கள் வந்த நிலையில் அது பொய்யாகி போனது. இந்நிலையில் திருமணம் குறித்து அஞ்சலியிடம் கேட்டபோது தற்போதைக்கு அது பற்றி எல்லாம் எந்த ஐடியாவும் இல்லை எனது முழு கவனமும் நடிப்பில் மட்டுமே இருந்து வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை கிளப்பி வருகிறது…………