தற்போது சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளியாகும் வீடியோக்களும்  பதிவுகளும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக உள்ளது எனலாம் இதன் காரணமாக பலரும் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொள்ள  இதனை ஒரு கருவியாக பயன்படுத்தி வரும் நிலையில் பல  முன்னணி திரை பிரபலங்கள் பலரும் கூட இந்த வழியை பயன்படுத்தி தங்களது

சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் இணையத்தில் சிறுவன் ஒருவரின் புகைபடம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது . இதையடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும்  நிலையில் அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய்

சேதுபதி தான். துவக்கத்தில் திரையுலகில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு தனது நடிப்பு திறமையின் மூலமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஹீரோ, வில்லன் என பல  மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சந்தானம் எனும் வில்லன் கேரக்டரில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம்

திரும்பி பார்க்க வைத்திருந்தார். இதனைதொடர்ந்து தற்போது கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். இப்படி இருக்கையில் விஜய் செதுபதி தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு செம வைரளாகி வருகிறது………