தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல ரசிகர்களின் மனதில் கவர்ந்து தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து வந்ததை அடுத்து கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான வெண்ணிலா கபடிகுழு படத்தில் ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் விஷ்ணு விஷால். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கதாநாயகனாக நடித்து இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து

கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் கட்டா குஷ்தி படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் விஷ்ணு விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் இதையடுத்து அந்த பதிவில் , நான் மறுபடியும் முயற்சி செய்தேன் ஆனால் மறுபடியும் தோற்று விட்டேன்

. நான் பாடம் கற்றுக்கொண்டேன் போன முறை தோல்வி அல்ல என் தவறும் அல்ல அது துரோகம் ஏமாற்றுதல் என் பதிவிட்ட நிலையில் இந்த பதிவு இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு மீண்டும் விவாகரத்து ஆகி விட்டதா என பலரும் பல விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ……….