பொதுவாக திரையுலகில் படங்களில் ஹீரோவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அவ்வளவாக ஹீரோயினுக்கு கொடுக்கபடுவது இல்லை இதன் காரணமாக அந்த காலத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கு இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விட்டனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி

நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மக்கள் ,மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் உல்லாசம் . இந்த படத்தில் அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தை ஜெடி-ஜெரி இயக்க பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த

நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை மகேஸ்வரி . மறைந்த பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவி அவர்களின் சித்தி மகள் எனும் நிலையில் இவர் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில்

நடித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டில் ஆனதை அடுத்து அங்கு பேஷன் டிசைனிங் துறையில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களது சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது ………..