தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் இந்நிலையில் இவரது படங்கள் திரையில் எப்போது வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் . இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் நெஞ்சினிலே . இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து தனது வசீகரமான அழகு மற்றும்

நடிப்பால் வெகுவாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை இஷா கோபிகர் . இவர் முதலில் தமிழில் பிரபல இயக்குனர் அகத்தியன் இயக்கிய படமான காதல் கவிதை படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் தமிழ் என் சுவாச காற்றே  , நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு

பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு டிம்மி டிரங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார் . அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் . இருப்பினும்

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இஷா அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது மகளுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கா இவ்வளவு பெரிய  மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர் …………

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Isha Koppikar Narang (@isha_konnects)