90-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்த பல முன்னணி நடிகைகள் தற்போது அவ்வளவாக படங்களில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமா பக்கமே வராமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான அழகன் படத்தின்

ஹீரோயின்களில் அறிமுகமானவர் பிரபல நடிகை மது பாலா . தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டு திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார் . இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் ஜென்டில்மேன்,செந்தமிழ் செல்வன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழை தொடர்ந்து

மலையாளம் , கன்னடம்  என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில்  நடித்து வந்த நிலையில் கடந்த 1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அமையா மற்றும் கெயா எனும் இற்று மகள்கள் உள்ளார்கள் . இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும்

ஆக்டிவாக இருக்கும் மதுபாலா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் மகள்களுடன் ஒன்றாக இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அவரது மகள்களை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரியமகள்கள் இருக்கா என வாயடைத்து போனதோடு விரைவில் அவர்களை திரையில் ஹீரோயினாக பார்க்கலாம் என  கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்………