தமிழ் சினிமாவில் பொறுத்தவரை இன்றைக்கு ஏராளமான புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு ஒரு சில படங்களில் நடித்த போதே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்று தொடர்ந்து பல  முன்னணி இயக்குனர்களின் படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து ஹீரோவாக  நடித்து வரும் பல  முன்னணி நடிகர்களும் இன்றைக்கு தங்களுக்கு மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் போதிய

வரவேற்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல படங்களில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் பிரசாந்த் . இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் தியாகராஜன் அவர்களின் மகனான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த செந்தூரபூவே படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையுலகில் அடையாளப்படுத்தி கொண்டார் . இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும்

நடிப்பின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருந்தார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு பிரபல முன்னணி தொழிலதிபர் ஒருவரின் மகளான கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இப்படி இருக்கையில் திருமணத்திற்கு பின்னர்  இவரது வாழ்க்கை கேள்விகுறியானது எனலாம் காரணம் அவரது மனைவிக்கு ஏற்கனவே ரெஜிஸ்டர் முறையில் இன்னொருவருடன் திருமணம் நடந்தது தெரிய வந்த நிலையில் இவர்களது திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் போய் முடிந்தது . அதன் பின்னர் சில காலம் தனிமையில் இருந்து வந்த பிரசாந்த்  தற்போது மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் . இந்நிலையில்

ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான அந்ததூன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள பிரசாந்த் அவர்களின் தந்தை தியாகராஜன் சமீபத்தில் இது குறித்து பேசியபோது திருமணம் குறித்தும் பேசியுள்ளார் அதில் எனது மகனின் திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்து விட்டது ஒருவேளை அவன் நினைத்தபடி காதல் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ என பலமுறை யோசித்துள்ளேன் என கூறியுள்ளார். மேலும் இந்த படம் வெளியான இரண்டாவது மாதத்தில் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது …………..