இன்றைய காலகட்டத்தில் பொதுவாக மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருப்பது என பார்த்தால் அது சினிமாவில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரை மற்றும் சோசியல் மீடியாவில் வெளிவரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பதிவுகளாக தான் இருந்து வருகிறது . இப்படி ஒரு நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவி இந்த வேலையை அதிகளவில் செய்து வருகிறது எனலாம் . அந்த வகையில் இந்த சேனலில் எதாவது ஒரு

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இன்றைக்கு மக்கள் மற்றும் திரையுலகில் வேற லெவலில் பிரபலமாக இருப்பதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் விஜய் டிவி பிரபலம் ஒருவரது சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரிதாக பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை

விஜேவாக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய நிலையில் இன்றைக்கு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் விஜே மணிமேகலை தான் அது . இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் கவர்ந்து வந்ததை அடுத்து தற்போது அந்த நிகழ்ச்சியில்

இருந்து வெளியேறி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளார் . இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில் சமீபத்தில் தனது சிறுவயதில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டதை அடுத்து  இதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம மணிமேகலையா இது வாயடைத்து போயுள்ளனர் ……………….