கடந்த சில வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல பிரமாண்ட படங்கள் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் என்றால் அது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்து தான். இந்நிலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், அர்ஜுன், கவுதம் மேனன், சஞ்சய் தத், மேத்யு, த்ரிஷா, மிஸ்கின் என பெரிய நட்சத்திர

பட்டாளமே இணைந்துள்ள நிலையில் இந்த படம் லோகேஷ் இதற்கு முன்னர் இயக்கிய படங்களின் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் காஷ்மீரில் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பு தற்போது சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் தொடர்ந்து பல முன்னணி பிரபலங்கள் தொடர்ந்து இணைந்து கொண்டே வருகிறார்கள் அந்த வகையில் துவக்கத்தில் இந்த படத்தில் கமல் நடிக்க இருப்பதாக கூறினார்கள்

இதனைதொடர்ந்து ரொலெக்ஸ் கேரக்டரில் சூர்யா நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் படத்தின் கேமியோ ரோலில் பிரபல நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி மாஸ்டர் படத்தில் நடித்த மகேந்திரன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறும் நிலையில் அதற்கு ஏற்றாற்போல் கடந்த சில

தினங்களுக்கு முன்னர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தனது முகத்தை மாஸ்க்  போட்டு மறைத்தபடி வந்துள்ளார். அதுகுறித்து கேட்டபோது முக்கியமான படத்திற்கான கெட்டப் என்றும் அதனால் நான் முகத்தை மறைத்து இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து இவர் லியோ படத்தில் நடித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அருண்ராஜா காமராஜா இயக்கி வரும் படத்தில் மகேந்திரன் நடித்து வருவதாகவும் அதற்கான கெட்டப் தான் இது எனவும் தெரிய வந்துள்ளது…………….