அந்த காலத்தில் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு  திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த பல முன்னணி நடிகைகள் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் அவ்வளவாக நடிக்க வாய்ப்புகள் வராத நிலையில் சினிமாவை விட்டு விலகி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்  பிரபல முன்னணி நடிகை மனிஷா

கொய்ராலா. இவர் முதலில் பாலிவுட் சினிமாவில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ஏ லவ்  ஸ்டோரி எனும் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் . இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பம்பாய் படத்தின் மூலமாக  கதாநாயகியாக தமிழ் மக்களிடையே அடையாளபடுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் வராததை அடுத்து கிடைக்கும்

கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் மனிஷா  கடந்த சில  வருடங்களுக்கு தனது முகநூல் நண்பரான நேபாள தொழிலதிபர் சம்ரத் தஹாலை திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து சில காலமாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக ஓசூ சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் மனிஷா கொய்ராலா அவரது கணவர்  இடையே  அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் எழுந்து வந்ததை அடுத்து இரண்டு வருடங்களே நீடித்த இவர்களது திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் போய் முடிந்தது.

இதனைதொடர்ந்து கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கபட்ட  மனிஷா அதற்கான சிகிச்சையை அமெரிக்காவில் மேமாரியன் ஸ்லோன் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ஒரு வருட காலம் தங்கி  சிகிச்சை எடுத்து வந்ததை அடுத்து  அதிலிருந்து முற்றிலுமாக மீண்டு வந்ததை அடுத்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமூகவளைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மனிஷா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் மனிஷாவை பார்த்த பலரும் அவரது இது என வாயடைத்து போயுள்ளனர்…………….

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Manisha Koirala (@m_koirala)