தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதை காட்டிலும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்கள் பிரபலமாக இருக்கிறார்கள் எனலாம் . இந்நிலையில் சீரியல் மற்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருந்து வருபவர்கள் முன்னணி சீரியல் நடிகர்களான ராஜ்கமல் -லதா ராவ் ஜோடிகள். இதையடுத்து

தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருவதோடு தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்களது யூடுப் சேனலில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இதனைதொடர்ந்து இவர்களது வீட்டில் பரபரப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது அந்த வகையில் ராஜ்கமல் மற்றும் லதா அவர்களுக்கு சொந்தமான வீட்டில் பின் பக்க கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் விலையுயர்ந்த பல

பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்  அதில் தங்களது வீட்டில் இருந்து பெரிய டிவி மற்றும் மோட்டார் உள்ளிட்ட பல விலையுயர்ந்த பொருட்களை திருடி சென்று விட்டதாகவும் இது குறித்து விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்க கூறியும் புகார் கொடுத்துள்ளனர் . இப்படி ஒரு நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும்

சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இது போன்ற  நிகழ்வுகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது பலரையும் உறைய செய்து வருகிறது இதன் காரணமாக பலரும் இணையத்தில் தங்களது வீடுகளின் வீடியோக்களை தவிர்க்க வேண்டும் என பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………….