தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல ,முன்னணி நடிகர் தனுஷ் இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் மூத்த மகளான  ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக

பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இருவரும் தனிமையில் இருந்து வரும் நிலையில் இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் டி 50, கேப்டன் மில்லர் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா லால் சலாம் உள்பட  பல படங்களை இயக்கி வருகிறார். இப்படி இருக்கையில் ஐஸ்வர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள

இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனைதொடர்ந்து இது குறித்து விளக்கம் கேட்டபோது, இளம் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருவதோடு அவருடன் அடிக்கடி வெளியில் சென்று வரும் நிலையில் சமீபத்தில் இருவரும்

சென்னையில் உள்ள ரிசார்ட்டில் காதலனுடன் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம். இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………….