தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரான தனுஷ் அவர்களை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் தனது இணைய பக்கத்தில்

பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் அதில் தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில் தற்போது இருவரும் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர். இதனைதொடர்ந்து தனுஷ் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி  வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கடந்த ஒரு  வாரமாக  வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் , சமீபத்தில் இது குறித்து விசாரிக்கையில் ஐஸ்வர்யா இளம் பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருவதோடு அடிக்கடி இருவரும் ஒன்றாக வெளியில் சென்று வருவதாகவும்

பல கிசுகிச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் ஒரே  ரிசார்ட்டில் ஒன்றாக இருந்த பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………….