தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் பதிவுகளும் வீடியோக்களும் தான் அதிகளவில் பிரபலமாக உள்ளது எனலாம் . இந்நிலையில் இதன் காரணமாக பலரும்  இதில் அதிகளவு நேரத்தை செலவழித்து வருவதோடு இதனை தொழிலாக வைத்துகொண்டு பல லட்சங்களை சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில் யூடுபில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் டிடிஎப் வாசன் மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் .

அந்த வகையில் பைக் ரைடு செல்வதை வீடியோவாக எடுத்துபோட்டு பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இதையடுத்து சோசியல் மீடியாவில் பிரபலமானதை அடுத்து தற்போது திரையுலகில் கால்தடம் பதித்துள்ள டிடிஎப் வாசன் மஞ்சள் வீரன் எனும் படத்தில் ஹீரோவாக  நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக தொடங்கியுள்ள நிலையில் டிடிஎப் வாசன் குறித்த மேலும் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

வருகிறது. அந்த வகையில் டிடிஎப் வாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த பெண் வரு யாருமில்லை பிரபல முன்னணி சீரியல் நடிகை சங்கீதா தான் அவர் எனவும் கூறப்பட்டு வருகிறது. பல முன்னணி சீரியல்களில் நடித்து வரும் சங்கீதா ராஜா ராணி சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்தார் இந்நிலையில் தற்போது தமிழும்

சரஸ்வதியும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரும் டிடிஎப் வாசனும்  காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் சங்கீதாவின் சகோதரர் டிடிஎப் வாசனின் நெருங்கிய நண்பர் எனும் நிலையில் இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது…………………