தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும்  பலத்த பிரபலத்தை பெற்று வரும் நிலையில் இதில் கலந்து நடிகர் நடிகைகளும் வெகுவாக தங்களை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தனியார்  சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் வேற லெவலில் ஹிட்டாகி வரும் நிலையில் இந்த சேனலில்

வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது சமையல் திறமை மற்றும் வசீகரமான தோற்றதால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இளம் நடிகர் அஸ்வின். அந்த நிகழ்ச்சியின் மூலமாக பலத்த பிரபலத்தை அடைந்ததை அடுத்து சினிமாவில்

பல முன்னணி படங்களில் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது . இதனைதொடர்ந்து ஹீரோவாக பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருந்து வரும் நிலையில் அஸ்வின் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி  வரும் நிலையில் இது குறித்து அவர்  தரப்பில் இருந்து எந்தவொரு அதிகார  அறிவிப்புகளும் வெளியாகவில்லை…………………….