தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி நடிகர் நடிகைகளும் சினிமாவில் நடிப்பதை அடுத்து திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் தங்களது துணையை தேடி திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கி இன்றைக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாக பல  முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருபவர் பிரபல இளம்  நடிகர்  கவின். இந்நிலையில் சமீபத்தில்

இவரது நடிப்பில் டாடா  திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று இருந்தது. இதையடுத்து கவின் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனைதொடர்ந்து இது குறித்து விசாரிக்கையில் திருச்சிற்றம்பலம் பட பாணியில் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும்

திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பல தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இதில் மோனிகா காஷ்டும் டிசைனராக இருந்து வருவதோடு பியுடிசியனாகவும் இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க  கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது லாஸ்லியா காதலித்து வந்த நிலையில் இருவரும் வெளியில் வந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அது வெறும் கனவாகவே போனது .

இவ்வாறு இருக்கையில் இந்த தகவலை அறிந்த லாஸ்லியா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு பின்னணியில் நெஞ்சமெல்லாம் காதல் எனும் பாடலை ஒலிர செய்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்………………..