இன்றைக்கு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பலரும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . இந்நிலையில் தற்போது அதிகளவில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வரும்

நிலையில் இதன் காரணமாக பல புதுமுக நடிகர்களும் வெகுவாக  பிரபலமாகி வருகின்றனர். இவ்வாறு  இருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக  வரவேற்பை பெற்ற திரைப்படமான குட் நைட் படத்தில் ஹீரோவாக சிறப்பாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர்  மணிகண்டன். இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே பல முன்னணி நடிகர்களின் படங்களில்

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாகி நடித்து வரும் நிலையில் அவர் குறித்த பல தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வேற லெவலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் உங்களுக்கு 35  வயதாகிறது இன்னும் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கீங்க

என கேட்டதற்கு, அதற்கு பதில் கொடுத்த அவர் இந்த கேள்வியை எங்க  அம்மா கேட்க சொன்னாங்களா, அதற்கு நான் இப்போது தயாராகவில்லை எப்போது எனக்கு சரி என தோன்றுகிறதோ அப்போது நான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது எனலாம்………………..