பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்  லியோ படத்திற்கு மக்கள் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் பெரிதளவில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் அதன் இரண்டாம் கட்ட படபிடிப்பு முழுதும் சென்னையில் மிக பிரமாண்டமாக செட் அமைத்து ஒரு வழியாக முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் படம் வெளியாக

 

உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்த படத்தின் அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய், தத், மிஷ்கின், த்ரிஷா, மேத்யு உள்பட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல முன்னணி நடிகரான மன்சூர் அலிகான் நடித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் பெட்டிப் ஒன்றில் கலந்து கொண்ட மன்சூர்

அதில் லியோ படம் குறித்த பல தகவல்களை உளறிகொட்டியுள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது , லோகேஷ் இயக்கும் படத்தின் ஒரு காட்சியிலாவது  நடித்து விட வேண்டும் என முந்தைய நாளில் அவர் அளித்த பேட்டியை  பார்த்தேன் ஆனால் அடுத்த நாள் பார்த்தால் அவர் லியோ படத்தின் சூட்டிங்கில் கேரவனில் இருந்தார். மேலும் அவர் எந்த கேரக்டரில் நடித்தார் என

தெரியவில்லை வந்தாரு சுட்டாரு போய்ட்டாரு என சொல்லிவந்த நிலையில் தான் படத்தின் காட்சியை சொல்லுவதை சுதாரித்து கொண்ட மன்சூர் இனி லியோ படம் குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என கூறிவிட்டார். இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………..