தமிழ் திரையுலகில் இளம் வயதிலேயே பல ஹிட் படங்களை கொடுத்தவர் பிரபல இயக்குனர் அட்லீ  இவர் இயக்கிய ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட பல படங்கள்  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும்  வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியையும்  பெற்றது. இதை தொடர்ந்து தற்போது அட்லி பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார்  ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக ஷாருக்கானின் மனைவி

கௌரி தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் இத்திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதே நேரத்தில் லியோ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததால் விஜய்க்கு

பதிலாக தெலுங்கு நட்சத்திர  நடிகர் அல்லு அர்ஜூன் இந்த ரோலை நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் “வந்த இடம் ” என்ற முதல் பாடல் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ஹையோடா என்ற இரண்டாவது பாடல்

வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் தனது பெயரை பதிப்பதற்காக நயன்தாரா இப்பாடலில் ஷாருக்கானுடன் வேற லெவலில் ரொமான்டிக்காக நடனமாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். இதை தொடர்ந்து நெட்டிசன்கள்  பலர் விக்னேஷ் சிவனை கலாய்த்து இணையதளத்தில் பதிவுகளை போட்டுகொண்டு இருக்கின்றனர். இப்படம் வருகின்ற செப் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது………..