தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின்   மனதை கொள்ளை கொண்ட பல முன்னணி நடிகைகள் தற்போது அவ்வளவாக சினிமாவில் நடிக்காமல் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மஜ்னு. இந்நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ்

மக்களிடையே தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ரின்கி கண்ணா . ஹிந்தியை பூர்விகமாக கொண்ட இவர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணா மற்றும் நடிகை டிம்பிள் கபாடியாவின் மகள் . இதையடுத்து பாலிவுட் சினிமாவில் வெளிவந்த கபி கபி எனும் படத்தில் முதன் முதலாக திரையுலகில் அறிமுகமானதை அடுத்து ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இருப்பினும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையிலும் மஜ்னு படத்தில் வரும் முதற்கனவே பாடலின் மூலமாக இன்றைக்கும் பலரது மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து பிரபல தொழிலதிபர் சமீர் சரண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதனைதொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டு தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த

நிலையில் இவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் . இந்நிலையில் அவரது சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரை பார்த்த பலரும் என்னது மஜ்னு பட நடிகையா இது என வாயடைத்து போனதோடு அவரது தற்போதைய புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்…………………….