கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றதோடு வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, யோகி பாபு, மோகன் லால், சிவராஜ் குமார். சுனில், தமன்னா என முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு  இருந்தது . இதனைதொடர்ந்து இந்த படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத்

இசையமைத்து இருந்தார் . இதனைதொடர்ந்து இந்த படம் பல திருப்பங்களை கொண்டிருந்த நிலையில் இதில் மோகன் லால் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் வேற லெவலில் கேமியோ ரோலில் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தில் ரஜினிக்கு இணையாக வில்லன்  கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் விநாயகன். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர்

அதில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த நிலையிலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து தனக்கென  தனி ரசிகர் பட்டாளமே

வைத்துள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க விநாயகன் வாங்கிய சம்பளம்  குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சுமார் 35 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது……………….