சினிமாவிற்கு எவ்வளவு ரசிகர் பட்டாளங்கள்  இருக்கிறதோ அதற்கு துளியும் குறைவில்லாமல் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். அதிலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படையே உள்ளது, இந்நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களையும் பார்வையாளர்களையும் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் என்றே கூறலாம். இந்நிகழ்ச்சி இவ்வளவு பெரிய

வெற்றியை பெறுவதற்கு முக்கிய காரணம் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உலக நாயகன் கமல் ஹாசன் என்று கூட கூறலாம். கடந்த பிக் பாஸ் சீஸன் 6 மிக பெரிய வெற்றியை பெற்றதால் இந்த சீஸன் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தயில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக இந்த சீசனில் மீடியா பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் பங்குபெற உள்ளதால் இந்த சீஸன் கடந்த

சீசனை விட மிக பெரிய வெற்றியை பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் இந்த சீசனில் பங்குபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சீசனில் ஶ்ரீதர் மாஸ்டர் தான் டைட்டிலை தட்டி செல்வார் என ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். மறுபுறம் இவர் ஜெய்க வாய்ப்பில்லை என ஒரு கூட்டம் மாறி

மாறி இணையதளத்தில் போட்டிபோட்டு கொள்வதை பார்க்க முடிகிறது. இதை வைத்தே தெரிந்துகொள்ளலாம் இந்த சீசனில் விறுவிறுப்பிற்கு  துளியும் பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………………