தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர். ஆரம்பத்தில் ரசிகர்களை சந்திப்பது, பேட்டிகள் கொடுப்பது என இருந்த இவர் சில காரணங்களால் ரசிகர்களை சந்திப்பது, பேட்டிகள் கொடுப்பது என அப்படியே நிறுத்திவிட்டார். இந்த வருடம் துணிவு படத்தை ரிலீஸ் செய்த அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தான் தொடங்கியது. அஜித் இளம் வயதில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவர் ஒரு சிறுவனை தனது மடியில் உட்கார வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த சிறுவன் யார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள், ஆனால் சிலர் அவர் இந்த நடிகர் தான் என கமெண்ட் செய்கின்றனர். அஜித் மடியில் உட்கார்ந்திருப்பது யாரும் இல்லை அட்டகத்தி பட புகழ் நடிகர் தினேஷ் தான்.

அப்படத்திற்கு பிறகு திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு, உள்குத்து, அண்ணனுக்கு ஜே போன்ற பல படங்களில் தினேஷ் நடித்து இருக்கிறது. அவர் நடித்ததில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படம்

என்றால் அது குக்கூ தான். இந்நிலையில் இவரது சிறுவயது புகைபடம் தற்போது இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம தினேஷா இது என வாயடைத்து போனதோடு அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்…………………