தற்போது சினிமாவில் ஹீரோயினாக பல இளம் நடிகைகள் அறிமுகமாகி வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை  கொண்டு தங்களுக்கென  தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த

வகையில் இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்த்ததை விட வசூல் மாபெரும் சாதனைகளை படைத்தது. இப்படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்க விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக

நடித்திருந்த நடிகை மீதா திருமணம் நிச்சையப்பட்டுள்ளது. ஆம், முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மீதாவிற்கு குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இன்று நடிகை மீதாவிற்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்துள்ளது. தனது வருங்கால கணவருடன் மீதா ரகுநாத்

எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதோடு இந்த புகைபடங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து  பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழைகளை கூறி வருகின்றனர் …………இதோ அந்த புகைப்படம்..