இன்றைக்கு திரையுலகில் இளம் நடிகைகள் பலரும் வந்துவிட்ட நிலையில் முன்னணி நடிகைகள் பலருக்கும் சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருவதை அடுத்து சினிமாவில் கதாநாயகியாக ஜொலித்தவர்கள் ஒருகட்டத்தில் அங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அடுத்து வருவது சின்னத்திரை தான்.

அப்படி சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து கலக்கி வருபவர் தான் நளினி. அவர் நடித்த ‘சின்ன பாப்பா, பெரிய பாப்பா’ உள்ளிட்ட தொடர்கள் பெரிய ஹிட் ஆனது. தற்போது சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் சீரியல்களில் நடித்து வரும் அவர் விஜய் டிவியின் மோதலும் காதலும் என்ற தொடரில் நடித்து வருகிறார். நளினி நடிகர் ராமராஜனை திருமணம்

செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அதன் பின் கருத்து வேறுபாட்டால் நளினி – ராமராஜன் பிரிந்துவிட்டனர். தற்போது நளினி தனது இரட்டை குழந்தைகள் அருணா மற்றும் அருண் உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

நளினியின் மகள் அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனையடுத்து அதில் அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு அவரது அழகை  வர்ணித்து வருகின்றனர்……………..