பொதுவாக சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக இந்தியளவில் வலம் வரும் ராஷ்மிகா

மந்தனாவின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நம்ம ராஷ்மிகாவா இது! எவ்வளவு க்யூட்டாக இருக்காங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள். திரையுலகில் தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவர் இவர் நடிப்பில் அடுத்ததாக அனிமல் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.  சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர்,

அணில் கபூருடன் இணைந்து ராஷ்மிகா முதல் முறையாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கண்டிப்பாக இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்கின்றனர். இதை தொடர்ந்து ரயின்போ மற்றும் புஷ்பா இரண்டாம் பாகம்

ஆகிய படங்கள் நடிகை ராஷ்மிகாவின் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களின் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………