பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நடந்து வரும் நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே போட்டியாளர்கள் இடையே வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் குறையாமல் இருந்து வருகிறது. இதற்கு ஏற்ப இந்த முறை பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும் தனியே

பிரிக்கப்பட்டுள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக்பாசும் தனது பங்குக்கு டாஸ்க் மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரி என பரபரப்பை தூண்டி விட்டு வருகிறார் . இதையடுத்து கடந்த சில வாரங்களாக போட்டியளர்கள் இடையே களேபரம் அதிகரித்த நிலையில் ரசிகர்களுக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது அதோடு இந்த சில காரணங்களால் எளிமிநேசன் ரத்து செய்யப்பட்டதை

அடுத்து இந்த வாரம் எந்த போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இல்லை. இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் முதல் சீசனில் நடந்தது போல இந்த சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து தாமாக தப்பிக்க முயற்சி செய்துள்ளார். போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட கூல் சுரேஷ் யாரும் எதிர்பாரதவிதமாக பிக்பாஸ்

வீட்டில் இருந்து வெளியேரும் விதமாக வீட்டில் மேற்கூரையில் ஏறி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………………